தமிழ்நாடு

பெரியார் சிலை மீது கண்டெய்னர் லாரி மோதியதியதற்கு பாஜக தான் காரணம்...? ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய திமுகவினர்

Tamil Selvi Selvakumar

விழுப்புரத்தில் காமராஜர் வீதியில் உள்ள பெரியார் சிலை மீது கண்டெய்னர் லாரி மோதியதில் பெரியார் சிலை முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் இருந்து பூனேவிற்கு டயர் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு விழுப்புரம் நோக்கி வந்துள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த ஓட்டுனர் மகேந்திர சவலி என்பவர் லாரியை ஓட்டி வந்த நிலையில், வழி தெரியாததால் கூகுள் மேப்பை பார்த்து இயக்கியுள்ளார்.

அப்போது தவறுதலாக குறுகலான பாதையில் சென்றதால் வாகனத்தை திருப்பிய போது காமராஜர் வீதியில் இருந்த பெரியார் சிலை மீது லாரி வேகமாக மோதியது. இதில் பெரியார் சிலை சரிந்து விழுந்து முற்றிலுமாக சேதமடைந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

பெரியார் சிலை சேதமடைந்தது குறித்து பரவிய தகவலை அடுத்து அங்கு ஏராளமானோர் திரண்டனர். அப்போது, பெரியார் சிலை சேதம் அடைந்ததற்கு பாஜக தான் காரணம் எனக்கூறி, சேதமடைந்த பெரியார் சிலை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.