தமிழ்நாடு

நடிகையின் செல்போன் எண்ணைக்கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்...!

நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை கேட்டு சினிமா கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார்

Malaimurasu Seithigal TV

சென்னை ராமாபுரம் பாரதி சாலைநகர் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகர் (52). இவர் சினிமா துறையில் கடந்த 30 வருடங்களாக கேமரா மேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா என்பவர் பிரபாகரனை சந்தித்து நடிகை பத்மபிரியாவை வைத்து பாரதியார் பாடல் ஒன்றை ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டுள்ளார்.

இதனிடையே இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சூர்யா என்பவர் நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணைக் கேட்டு, பிரபாகரனுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பிரபாகரன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சூர்யா, தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பிரபாகரன் மனைவியை கற்பழித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் செல்போன் நம்பரை தர மறுத்தால் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக ராமாபுரம் காவல் நிலையத்தில் கேமராமேன் பிரபாகரன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையின் செல்போன் எண்ணைக் கேட்டு திரைப்பட கேமரா மேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.