தமிழ்நாடு

புதையல் இருப்பதாக கூறி வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டிய நபர்...

பெரம்பலூர் அருகே புதையல் இருப்பதாக கூறி, வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Malaimurasu Seithigal TV

பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. ஐஸ் வியாபாரம் செய்துவரும் இவரது வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து பரமத்திவேலூரைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரை அழைத்து வந்து மாந்த்ரீக பூஜை செய்தனர். மேலும் வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்து மூன்று நாட்களாக இரவு, பகல் பாராமல் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டியுள்ளனர்.

இதனால் பிரபுவின், வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்கள் புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரபு உட்பட 7 பேரை பிடித்து புதையலுக்காக நரபலி போன்ற விபரீத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா  என்ற  கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.