தமிழ்நாடு

பலருக்கும் காதல் எட்டாக்கனி தான்...காதலால் மருத்துவ படிப்பை இழந்த இளம்பெண்!

Tamil Selvi Selvakumar

தென்காசி அருகே காதலனால் ஏமாற்றப்பட்ட இளம்பெண் மருத்துவப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காதலால் வாழ்ந்தவர்கள் ஒருபுறம் இருக்க, காதலால் வாழ்க்கை அடிப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதன்படி தென்காசி மாவட்டம் கடைய நல்லூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துவந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வேலை எதுவும் இல்லாமல் இருந்த சுபாஷை நம்பி அந்த இளம்பெண் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். ஆனால், அதற்கு பிறகு உரிய பணம் இன்றி தமது மருத்துவ கனவை பாதியில் நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில், சுபாஷ் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதை அடுத்து, தன்னை கணவர் ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் அப்பெண் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காதலை நம்பி சென்ற பெண் கணவனும் இன்றி, காதலால் மருத்துவ படிப்பு பறிபோனதையும் எண்ணி அப்பெண் வேதனை அடைவது குறிப்பிடத்தக்கது.