தமிழ்நாடு

அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி கடத்தப்பட்ட விவகாரம்.. 4 பேர் கைது!!

அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பி கடத்தப்பட்ட விவகாரத்தில்  4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Suaif Arsath

ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினத்தைச் சேர்ந்தவர் ஷேக் மீரான் என்னும் கண்ணு வாப்பா. சென்னை மண்ணடியில் தங்கி வெளிநாட்டுப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம்  பாரிமுனையில் உள்ள அங்கப்பன் நாயக்கன் தெருவில் தனது நண்பர்களுடன் உணவு அருந்த சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கும்பல் ஷேக்மீரானை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கடத்திச் சென்றனர்.

ஷேக்மீரானின் அண்ணன் நூருல் ஹக் என்பவர் 40 லட்சம் ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றியதால் அந்த பணத்தை கேட்டு ஷேக்மீரான் கடத்தப்பட்டது தெரியவந்தது. போலீசார் கடத்தல் ஆசாமிகளின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் புலனாய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து மண்ணடி முத்துமாரி செட்டித்தெருவைச் சேர்ந்த முகமது ராவுத்தர், புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது ரிபாய்தீன், விஜயன், லட்சுமணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். நான்கு பேர் உள்பட மொத்தம் 6 பேர் சேர்ந்து மண்ணடி முத்துமாரி செட்டி தெருவில் அடைத்து வைத்து ஷேக்மீரானை அடித்து உதைத்தது தெரியவந்தது.

மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40-க்கும்  மேற்பட்ட வெளிநாட்டு மது பானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அப்பாஸ் மற்றும் மதன்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.