தமிழ்நாடு

விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட நபர்...கொடூரமாக தாக்கிய போலீஸ்...வைரலாகும் வீடியோ காட்சிகள்!

Tamil Selvi Selvakumar

கர்நாடக மாநிலத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரப்பட்டவரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்:

துமுக்குர் மாவட்டம் குனிகள் சுரங்கத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது மனைவி ரத்னாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். நாளடைவில் ரவிக்கு மனைவி மேல் சந்தேகம் ஏற்பட்டதால் அவ்வப்போது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ரவியை தாக்கிய காவல்துறையினர்:

இது குறித்து மனைவி ரத்னா, தன் கணவர் ரவி கொடுமைப்படுத்துவதாக அமிர்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் புகார் குறித்த விசாரணைக்காக ரவி காவல் நிலையம் வந்த நிலையில் அவரை தலைமை காவலர் ஒருவர் மோசமான வார்த்தைகளால் திட்டி கொடூரமாக தாக்கியுள்ளார்.

காவலர் பணியிடை நீக்கம்:

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான நிலையில்,  சம்பந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.