தமிழ்நாடு

ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்...கேரளா அனுமதி அளித்ததும் தொடங்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்!

Tamil Selvi Selvakumar

ஆனைமலையாறு – நல்லாறு திட்டம், கேரள அரசு அனுமதி வழங்கியதும் தொடங்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தின் கீழ் புதிய அணை கட்ட அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இத்திட்டத்திற்கு கேரள அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், கேரள அரசின் அனுமதி பெற்றவுடன் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.