வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக, காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எனினும் மகாராஷ்டிராவில் இருந்து இன்னும் ஓரிரு தினங்களில் தக்காளி வர இருப்பதால், விலை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தக்காளி விலை உயர்வு பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.