தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்..! -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Malaimurasu Seithigal TV

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என் வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:.. 

அமுல் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குஜராத் மாநில அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான அமுல் நிறுவனம்,  தமிழ்நாட்டில் பால் கொள்முதலை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது என்றும், நாள்தோறும் 30 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஆவின், கொள்முதல் விலையாக லிட்டருக்கு 32 ரூபாய் முதல், 34 ரூபாய் வரை வழங்கி வரும் நிலையில் அமுல் நிறுவனம் 36 ரூபாய் வழங்குகிறது. இதனால், போட்டியை சமாளிக்க பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்த வேண்டும் என  அவர் வலியுறுத்தியுள்ளார்.