தமிழ்நாடு

சாலை சரியில்லை!!!! சொந்த பைக்கை கொழுத்தி பரபரப்பு

புதுச்சேரியில் சாலையை சரிவர செப்பனியிடாததால் அப்பகுதி சேர்ந்த வாகன ஒட்டி தனது இருசக்கர வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்தி தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் தணிகாசலம், ஜூஸ் கடை நடத்தி வருகிறார், இவரது இருசக்கர வாகனம் இன்று காலை கரிக்காலம்பாக்கம் கூட்ரோடு அருகே தீ பற்றி எறிந்தது இதனை பார்த்த அருகே இருந்தவர்கள் தீயை அனைத்தனர்.

இது தொடர்பாக கரிக்கலாம்பாக்கம்  போலீசார் நடத்திய விசாரணையில் சமீபத்தில் அப்பகுதியில் செப்பனியிட்ட சாலைகள் மீண்டும் மேடும் பள்ளமாக ஆகியதில் ஆத்திரம் அடைந்த தனிகாசலம் தானே தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொள்ளுத்தியது தெரியவந்ததை அடுத்து, தனிகாசலத்தை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் இந்த இருசக்கர் வாகன தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது