தமிழ்நாடு

பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ....அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்...

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த விபத்தில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Malaimurasu Seithigal TV

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மூடூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்த பள்ளியில் தற்போது 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை 25 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்தது.தொடர் கனமழைகாரணமாக பழைய கட்டிடமான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறிது சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இருந்த போதிலும் 25 மாணவர்களுடன் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல பள்ளி வகுப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் திடீரென பள்ளி மேற்கூரை சிமெண்ட் 2 இடங்களில் பெயர்ந்து விழுந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.