தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன... தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன.

இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் இரண்டு ஆகிய நாட்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல் நடைமுறைகள் நேற்றுடன் முடிவடைந்ததாகவும், இதனால், தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் முடிவுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் அரசு நலத்திட்டங்களை இனி மேற்கொள்ளலாம்.