கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும் தென்காசி மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சாரல்மழை பெய்யத் தொடங்கும். அப்போது குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.
இந்நிலையில் ஜுன் மாத இறுதியை எட்டியும் தென்மேற்குப்பருவமழை பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது குளிர் காற்றுடன் சாரல்மழை பெய்யத் தொடங்கியதை அடுத்து, அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. நீண்ட நாட்களுக்குப் பின் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.