தமிழ்நாடு

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில்...13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலைகள் கண்டெடுப்பு..!

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Selvi Selvakumar

வலங்கைமான் அருகே ஆலங்குடியில், முத்து என்பவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டினார். அப்போது அங்கிருந்து சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த சிலைகளை திருவாரூர் அருங்காட்சியக காப்பாச்சியர் மருதுபாண்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதில் சிலைகள் அனைத்தும் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும், ஐம்பொன்னால் செய்யப்பட்டவை எனவும் தெரியவந்தது. 3 அடி உயரத்தில் உள்ள சிலையானது சுந்தரர் சிலை என்பதும், சிறிய அளவில் உள்ளவை தன்வந்திரி, இராமானுஜர், பூமா தேவி, ஸ்ரீ தேவி சிலைகள் எனவும் கண்டறியப்பட்டது.