தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Tamil Selvi Selvakumar

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நடத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதிமுக ஆட்சிக்காலத்தில் 2011 முதல் 2015ம் ஆண்டு வரை, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, தனது துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலத்தை ஏற்று வழக்கை ரத்து செய்தது. தொடர்ந்து  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து வந்து நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோரின் சிறப்பு அமர்வுமுன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கைத் தொடர்ந்து நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.