தமிழ்நாடு

இன்று கூடுகிறது... தமிழ்நாடு அமைச்சரவை!

Malaimurasu Seithigal TV

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் புதிய தொழில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், துறை ரீதியான அமைச்சர்களின் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் கொள்கை ரீதியில் சில முடிவுகள் எடுப்பது தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.