தமிழ்நாடு

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் ...அண்ணாமலை

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடந்த பட்டாசு கடை தீவிபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் 11பேர் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

மேலும் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு தலா 5 லட்சம் அறிவித்துள்ள நிலையில்,  கூடுதலாக 5 லட்சம் நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் சங்கராபுரம் வெடிவிபத்து சம்பவத்தில் தமிழக அரசு நல்ல முறையில் கையாண்டுள்ளது எனக் கூறினார்