தமிழ்நாடு

திருட சென்ற வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லை..! ஆத்திரத்தில் பொருட்களை தீயிட்டு கொளுத்தி சென்ற திருடன்..!

திருட வந்த வீட்டில் நகையோ பணமோ இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன் அங்கிருந்த பொருட்களை தீயிட்டு கொளுத்தி சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு...

Tamil Selvi Selvakumar

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் -  என்ஜிஜிஓ நகரில் வசித்து வருபவர்  வெங்கடேசன். இவர், திருக்கோவிலூர் ஐந்துமுனைச் சந்திப்பில் பிரபல ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். என்ஜிஜிஓ நகரிலுள்ள இவரது வீட்டில், தரைதளத்தில் இவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், மர்ம நபர் யாரோ பின்பக்கமாக முதல் இரண்டாவது தளத்தின் கதவை உடைத்து, உள்ளே புகுந்து, அங்கிருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, அதில் நகையோ பணமோ இல்லாததால் ஆத்திரம் அடைந்துள்ளார்.

இதையடுத்து மர்ம நபர், அங்கிருந்த பெட், தலையணை, புகைப்பட ஆல்பம், பீரோ, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல பொருள்களை தீவைத்து கொளுத்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துள்ளார்.

இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.