திண்டுக்கல் பேகம்பூர் முகமதிய புரத்தில் தனியாருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சி யின் திண்டுக்கல் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த 22.09.22 அன்று NIA அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் சோதனை 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.
மேலும் படிக்க | நம்பி வந்தால் உயிர் கொடுக்கும் மதுரையில் நண்பர்களை ஏமாற்றி 30 லட்சம் ரூபாய் வரை கடன்: மாஸ்டர் பிளான் செய்த கணவன் மனைவி தலைமறைவு
பின்னர் கட்சி அலுவலகத்தில் இருந்து முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி சென்றனர் இதனைத் தொடர்ந்து மூன்று மாடிக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் இன்று 09.02.23 மாலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சி அலுவலகத்திற்கு வந்த NIA ஆய்வாளர் அருண் மகேஷ், மற்றும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தன மேரி ஆகியோர் கட்டிடத்தில் நோட்டிஸ் ஒட்டிச் சென்றனர். இந்த மூன்று மாடி கட்டிடத்தில் ரகசிய திட்டம், ஆலோசனைக் கூட்டம், மறைமுக சதித்திட்டம் மேலும் பயிற்சிகள் நடத்தியதாகவும் இந்த வழக்கில் மூன்று மாடி கட்டிடம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாடி கட்டிடத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என கட்டிடத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர் இதனால் பேகம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.