தமிழ்நாடு

மது கூடாரமாக மாறி வரும் திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகம்..!

மது கூடாரமாக மாறி உள்ளது, திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகம். கண்டு கொள்ளாத சார்பதிவாளர், சுதந்திர தின விழாவிற்கு மட்டும் தான் சுத்தம் செய்யப்படும் என அலட்சிய பதில் கூறியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூரில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக நித்தியானந்தன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் முட்புதர்கள் நிறைந்தும், குப்பை கூடமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் சிலர் குடித்துவிட்டு மது பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அது மட்டும் இன்றி பத்திர எழுத்தாளர்கள், சார்பதிவாளர் அலுவலகத்தில் தான், இதற்கு முன்பு பத்திரம் எழுதி வந்தனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றதால், தற்போது அலுவலகம் முழுவதும் மது கூடாரமாகவும் மாறி வருகிறது என எழுத்தாளர்கள், பத்திர எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சார் பதிவாளர் நித்தியானந்தனிடம் கேட்கும் போது,  சுதந்திர தின விழாவிற்கு மட்டும் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று அலட்சியமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.