தமிழ்நாடு

அமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்த பழங்குடியின மக்கள்!!

Malaimurasu Seithigal TV

அப்புகோடு கிராமத்தில் புதிய ஆவின் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்கத்தினை திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சருக்கு, படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையை அணிவித்து, இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் உதகையில், இன்று தமிழ்நாடு பால் மற்றும் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்று, பல்வேறு வளர்ச்சி பணிகளை திறந்து வைத்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக உதகையை அடுத்த அப்புக்கோடு கிராமத்தில் ஆவின் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ், துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சருக்கு, நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையை அணிவித்து, அவர்களுடைய பாரம்பரிய இசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.