தமிழ்நாடு

நகரும் படிக்கட்டில் நிலை தடுமாறி விழுந்த பெண்..! இணையத்தில் பரவிய வீடியோ..!

Malaimurasu Seithigal TV

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், வயதான பெண் ஒருவர் நகரும் படிக்கட்டில் (Escalator) பயணித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத அவர் பின்புறமாக சரிந்து விழுந்தார்.

இதனைக் கண்ட ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு  கண்டறியும் பிரிவு உதவி ஆய்வாளர் ராஜகுமார், அந்தப் பெண்ணை தாங்கி பிடித்து நொடிப்பொழுதில் கீழே விழாமல் காப்பாற்றினார். பின்னர் உடனடியாக நகரும் படிக்கட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இயக்கம் நிறுத்தப்பட்டது. அதனால் அந்த பெண் எந்த காயமுமில்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.