தமிழ்நாடு

வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்; கண்ணீர் வடித்த பெண்!

Malaimurasu Seithigal TV

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அருகே வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளிடம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.

நாகப்பட்டினம் அந்தனப்பேட்டையைச் சேர்ந்த சத்யா, தனது பெற்றோர் மற்றும் இரண்டு  குழந்தைகளோடு நத்தம் புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து வசித்து வருகிறார்.

இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஆக்கிரமிக்க முயற்சி செய்ததால், சத்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

இந்நிலையில், திமுக  பிரமுகர் தூண்டுதலின் பேரில் சத்யாவின் வீட்டை காலி செய்வதற்காக ஜேசிபி இயந்திரத்துடன் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, நீதிமன்ற வழக்கை சுட்டிக் காட்டியதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

இதனிடையே, வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளிடம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.