சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள தென்பசார் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு பெண் சுற்றித் திரிந்து அங்கு உள்ள வீடுகளை நோட்டமிட்டதுடன், ஒரு சில வீடுகளை புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலம் காவல்துறையினர் அவரிடம் விசாரித்தபோது, முறையாக பதில் அளிக்காததால் அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.