தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்...! 8 ஆண்டுகள் சிறை..!

Malaimurasu Seithigal TV

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுமியின் வீட்டில் இரவு 11 மணி அளவில் அத்துமீறி உள்ளே நுழைந்து, அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டல் முயற்சியில் ஈடுபட்ட கிறிஸ்டோபர் என்ற நபருக்கு எட்டு ஆண்டுகள் தண்டனையும் 61 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி டாக்டர் ஆர் சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சித்ததாக ஏழு வருடமும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாக ஒரு வருடம் என எட்டு ஆண்டுகள் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்யா இழப்பீடு தொகை வழங்குவதற்கான ஆணையை பிறப்பித்தார். முன்னதாக 75,000 இழப்பீடு கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் 75 ஆயிரம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தன்னுடைய தீர்ப்பை தெரிவித்தார். இதையடுத்து தண்டனை பெற்ற நபரை காவல்துறையினர், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.