தமிழ்நாடு

டீ கொடுக்க தாமதமானதால் கடைக்காரரின் மண்டையை உடைத்த வாலிபர்! அலேக்கா தூக்கி சிறையில் அடைத்த போலீசார்!

ஓசூரில், டீ கொடுக்க தாமதமானதால், டீ கடைக்காரரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Selvi Selvakumar

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த ஜபீர் அகமது, கும்பார்பேட்டை பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது, டீ கொடுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த ஜபீர், டீ கடைக்காரரின் மண்டையை, கிளாசால் அடித்து உடைத்துள்ளார். மேலும், தட்டி கேட்க முயன்ற பொதுமக்களை பட்டப்பகலிலேயே வெறிப்பிடித்தவன் போல் பட்டாக்கத்தியை கையில் வைத்து அனைவரையும் மிரட்டி உள்ளார்.

பின்னர் இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜபீர் அகமதுவை கைது செய்து, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.