தமிழ்நாடு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்! ஆதரவு கொடுத்த சகோதரர்... போக்சோவில் இருவரும் கைது!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரும், அவருக்கு ஆதரவாக சிறுமி வீட்டினருக்கு மிரட்டல் விடுத்த சகோதரரும்  கைது செய்யப்பட்டனர்.  

Tamil Selvi Selvakumar

சிலம்பிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓராண்டாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பார்த்திபனின் சகோதரரான மோகன்ராஜ் என்பவரும் சிறுமியின் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்து கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சகோதரர்கள் இருவரும் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.