மதுரை மாவட்டம் இளமனூர் கோழிக்குடி கிராமத்தை சேர்ந்த சௌந்தரராஜன். நேற்று இவரது தாயார் முத்துமாரியுடன் உறங்கான்பட்டி அருகேயுள்ள வங்கிக்கு சென்று அவரது தாயார் முத்துமாரியின் கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்து காரின் முன்பகுதியில் வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தாயும், மகனும் காரில் உறங்கான்பட்டியில் இருந்து வீரபாஞ்சான் அருகே உள்ள ஏடிஎம் -க்கு சென்ற சௌந்தரராஜன் தனது கணக்கில் ரூ. 50 ஆயிரத்தை வரவு வைப்பதற்காக காரை நிறுத்தி விட்டு தாயாரை மட்டும் காரில் அமர வைத்து சென்றுள்ளார்.
பின்னர் காரில் வந்து பார்த்தபோது காரின் முன்புறம் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பதற்றம் அடைந்த சௌந்தரராஜன் மற்றும் அவரது தாயார் இருவரும் பணம் காணாமல் போனது தொடர்பாக மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஏடிஎம் முன்பாக இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது காரின் அருகேசென்ற மர்ம நபர் ஒருவர் பணம் கீழே விழந்து கிடக்கு எனக் கூறி காரில் அமர்ந்திருந்த சௌந்தராஜனின் தாயார் முத்துமாரியின் கவனத்தை திசை திருப்பி அவரை காரில் இருந்து கீழே இறங்க வைத்துள்ளதும், மறுபுறம் அடுத்த நொடியே 2 மர்ம நபர்கள் உடனே டிரைவர் சீட் முன் பகுதியில் உள்ள காரின் கதவை திறந்து 1 லட்சத்தை எடுத்துக் கொண்டு மற்றொருவரின் பைக்கில் சென்றதும் பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில் பைக்கில் பணத்தை திருடி சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரையில் கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சம் பணத்தை திருடிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியில் பணம் எடுப்பதை பார்த்து அதனை பின் தொடர்ந்து திருடியிருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.