தமிழ்நாடு

பேரவை நிகழ்வுகளை படம்பிடித்த நபர்...விசாரணையை தொடங்கியது அவை உரிமை குழு!

Tamil Selvi Selvakumar

தமிழக சட்டப்பேரவையின் அவை உரிமை குழு, அதன் தலைவரும் துணை சபாநாயகருமான பிச்சாண்டி தலைமையில் இன்று தொடங்கியது.

சபாநாயகருக்கு கோரிக்கை :

கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரை நிகழ்ந்து கொண்டிருக்கும்போது முக்கிய விருந்தினர் மாடத்தில் அமர்ந்திருந்த ஒருவர் அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தார் என்றும், இதில் அவை உரிமை மீறல் உள்ளதாகவும், இந்த பிரச்சனையை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார்.

அவை உரிமை குழுவிற்கு உத்தரவிட்ட சபாநாயகர் :

இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, இந்த பிரச்சனையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை  குழுவிற்கு உத்தரவிடப்படுவதாக கூறினார்.

அவை உரிமை குழு தொடங்கியது :

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் அவை உரிமை குழு, அதன் தலைவரும், துணை சபாநாயகருமான பிச்சாண்டி தலைமையில் இன்று கூடுகிறது. இந்த குழுவில்  அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பன், இ கருணாநிதி, சிவகுமார் உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் உள்ளனர்.

தொடர்ந்து, இன்று கூடியுள்ள அவை உரிமை குழுவில், ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது முக்கிய விருந்தினர் மாடத்தில் இருந்து சட்டமன்ற  நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தது தொடர்பாக விவாதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.