theni valaikappu vizha news 
தமிழ்நாடு

ஆண்டிபட்டியில் 100 கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா..

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி - சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்தின. விழாவில் ஊட்டச்சத்து, இரும்புச்சத்து உணவுகள், காய்கறிகள், பழங்கள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு, கர்ப்பிணி பெண்களுக்கு சேலை மற்றும் 5 வகை கலவை சாதங்கள் வழங்கப்பட்டது.

Anbarasan

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பாக 100 கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார்

விழாவில் கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டிய உணவு வகைகள் ,எடை அதிகரிப்பின் விளக்கங்கள் ,இரும்புசத்து மாத்திரை உட்கொள்ளுதல் , அவசியம் குறித்து விளக்கப்பட்டது

மேலும் பிரத்தியேகமாக நுழைவாயிலில் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து கண்காட்சியில் காய்கறிகள் பழங்கள் சிறுதானியங்கள் எடை தரும் உணவுகள்,சத்து தரும் உணவுகள் , கீரை வகைகள்,இரும்புச்சத்து உணவு வகைகள் குறித்து காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பினி பெண்களுக்கு காட்டன் சேலை, பொட்டு வைத்து வளைகாப்பு நடத்தப்பட்டு சர்க்கரை பொங்கல் ,புளிசாதம் உள்ளிட்ட 5 வகை கலவை சாதங்கள் வழங்கப்பட்டு ஆசி வழங்கப்பட்டது

விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100 கர்ப்பினிப் பெண்கள் கலந்து கொண்டனர்.