தமிழ்நாடு

துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பெருமிதம்...!

Tamil Selvi Selvakumar

தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக் கழகங்கள் தமிழகத்தில் உள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

துணை வேந்தர் மாநாட்டை தொடங்கி வைத்த ஸ்டாலின்:

சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் நான் முதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பாடத்திட்ட மாற்றம், மாநில கல்விக்கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. 

முதலமைச்சர் பெருமிதம்:

மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தற்போதுள்ள பல்கலைக் கழகங்களில், 19 பல்கலைக்கழகங்கள் திராவிட அரசு அமைந்த கால கட்டங்களில் தொடங்கப்பட்டதாக பெருமிதம் கூறினார். மேலும், பல்கலைக் கழகங்களுக்கு ஆண்டு தோறும் மூவாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறிய முதலமைச்சர், தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களுள் 10 ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளதாகவும் கூறினார்.