தமிழ்நாடு

தமிழ்நாட்டில் North Indians அச்சப்பட தேவையில்லை...அமைச்சர் கணேசன் பேட்டி!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மிளகுபாறையில் உள்ள ESI மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ESI மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைக்கு நிகராக செயல்பட்டு வருவதாகவும், தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் அனைத்து வசதிகளும், சிகிச்சைகளும் ESIயில் கிடைப்பதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், தோராயமாக 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும், வெளி மாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் கூறினார். 

மேலும், பீகார் அரசு சார்பில் அனுப்பட்ட குழுவிடம், அம்மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என கூறி உள்ளனர். அதனை அந்த அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். எனவே, வெளி மாநில தொழிலாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.