தமிழ்நாடு

"காவல் துறை அதிகாரிகளை மாற்றி எந்த பயனும் இல்லை; அமைச்சரை மாற்றுக” - அன்புமணி ராமதாஸ்.

Malaimurasu Seithigal TV

தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் இல்லையேல் பெண்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என விழுப்புரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஏ.கே.ஆர் குப்பம் கிராமத்தில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 12 நபர்கள் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை  நேரில் வந்து சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து அவர்களிடம் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்... 

"விஷச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவம் இந்த அரசின் தோல்வியை காட்டுகிறது என்றும், காவல் துறை அதிகாரிகளை மாற்றி எந்த பயனும் இல்லை; மதுவிலக்கு துறை அமைச்சரை மாற்ற வேண்டும்", எனவும் கூறினார்.  

மேலும், ' டாஸ்மார்க் கடையை மூடுகிறோம்'  என்ற அறிவிப்பு மட்டுமே உள்ளதாகவும், தமிழகத்தின் மூன்று தலைமுறைகளை தமிழக அரசு மதுவுக்கு அடிமை ஆக்கியுள்ளது என்றும் கூறினார்.  இந்தியாவிலேயே அதிக மது விற்பனை நடக்கின்ற மாநிலம்  , அதிக விபத்துக்கள் நடக்கின்ற மாநிலம் , அதிக தற்கொலை நடக்கும் மாநிலம், கள்ளச்சாராய உயிர் இழப்புகளை விட  அரசு விற்கின்ற டாஸ்மார்க் சாராயத்தில் இழப்புகள் அதிகம் உள்ளதும் தமிழ்நாடு தான் என்றும் சாடினார். 

காவல்துறையினர் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவரும் இந்த விவரத்தில் வருகிறது இந்த விபத்திற்கு முழு காரணம் இவர்கள்தான், தமிழக அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும், தமிழகத்தில் உள்ள பெண்கள் கொதிப்படைந்து உள்ளனர் என்றும், இதனை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும்,  திமுகவிற்கு வருகின்ற தேர்தலில் பேராபத்து இருக்கும் நாவும் தெரிவித்தார். 

செந்தில் பாலாஜியை அமைச்சராகத்  தொடரவிட்டால் அரசுக்கு மிகப்பெரிய பாதிப்பு வரும் என்றும், தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்கப்பட்டு வருகிறது, தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் சந்து கடைகள் மூலம் டாஸ்மார்க் மதுபானங்கள் 24 மணி நேரமும்  விற்கப்பட்டு வருகிறது, இது அரசுக்கு நன்றாக தெரிந்தும் அரசியல் காரணத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வருடத்திற்கு 5 லட்சம் நபர்கள் டாஸ்மார்க் மதுவால் உயிரிழந்து வருகின்றனர் ", என்றும் குறிப்பிட்டார்.  

தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பெண்களை ஒன்று திரட்டி மதுவிலக்கு மாநாடு நடத்த உள்ளதாகவும், இது ஒரு சாதாரண அரசியல், மது குடிக்கும் பழக்கத்தை இளைஞர்கள் மத்தியில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து உருவாக்கியுள்ளதுகுற்றம்சசாடிய அவர், இதுகுறித்து விரைந்து அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.  

அதோடு, இப்படிப்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மருந்து தமிழகத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.  மேலும், தமிழகத்தில் உள்ள பெண்களை ஒன்று திரட்டி திரட்டி வரும் காலங்களில் மதுவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் பாமக சார்பில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.