சென்னை, கோயம்பேட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் - மேட்டுக்குப்பம் சாலையில் செயல்பட்டு வரும் ஆக்ஸிஸ் வங்கிக்கு சொந்தமான ஏடி.எம் மையத்தை வழக்கம் போல காவலர்கள் சோதனை செய்த போது, ஏடி.எம் கார்டு பயன்படுத்தும் இடத்தில் சேதம் அடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபர், பணம் எடுக்க வந்தபோது அவரது கார்டு இயந்திரத்தில் சிக்கியதும், ஆத்திரத்தில் இயந்திரத்தை உடைத்து கார்டை எடுத்து சென்றது தெரியவந்தது. இதை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.