தமிழ்நாடு

ரூம் போட்டு யோசிச்சு திருடிய திருடர்கள்...என்னது செல்போன் டவர திடுடிட்டாங்களா? 

மதுரையில் செல்போன் டவரை காணவில்லை என போலீஸில் புகார் அளித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

மதுரையில் செல்போன் டவரை காணவில்லை என போலீஸில் புகார் அளித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு கண்ணும் கண்ணும் படத்தில் தனது நிலத்தில் தோண்டிய கிணறு காணவில்லை என்று போலீசில் புகார் அளித்த சம்பவம் போன்றே மதுரையில் நிகழ்ந்துள்ளது. காணாமல் போனது  பிரபல நிறுவனமான வோடாபோன் நிறுவனத்தின் செல்போன் டவர் ஆகும்.

மதுரை மாவட்டத்திலுள்ள கூடல்புதூர் இல் அமராவதி தெரு பகுதியில் ஒரு நிறுவனத்தின் சார்பில் செல்போன் டவர் ரூ.28 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டிருந்தது.கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சிக்னல் கிடைக்காத காரணத்தால் பொதுமக்கள் கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில், அந்நிறுவனம் செல்போன்  டவர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.அப்போது டவரை திருடி சென்றுள்ளதாக அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடேசன் முத்து வெங்கடேசன் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.  போலீஸ் விசாரணை செய்த போது டவர் மாயமானது உறுதியானது. இந்நிலையில் போலீஸ் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.