தமிழ்நாடு

''அண்ணாமலை விளம்பர உளவியலுக்கு ஆளாகி உள்ளார்'' திருமாவளவன் விமர்சனம்!!

Malaimurasu Seithigal TV

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊடகம் தம்மை பற்றி பேச வேண்டும் என்பதற்காக விளம்பர உளவியலுக்கு ஆளாகி உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,  நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாகவும், பள்ளி சிறுவர்கள், கல்லுரி மாணவர்கள், அனைவரும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், சிலர் மாணவர்களுக்கு சாதி, மத நச்சு கருத்துகளை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

அதனை தொடர்ந்து, "இந்தியா கூட்டணி அமைந்ததில் இருந்து பாஜகவினருக்கு அடி வயிற்றில் புலி கரைகிறது. பிரதமர் பயந்து போய் இருக்கிறார். எதிர் கட்சிகள் ஒன்று சேரும் என கனவில கூட நினைத்து இருக்க மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை என்ற என்னத்தோடு இருந்தவருக்கு அனைத்து ஏதிர் கட்சியும் சேர்ந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்தது காலத்தின் தேவையாக இருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளில் இருந்து பாஜக, ஆர்எஸ்எஸ் வாய்க்கு வந்த படி பிதற்றி கொண்டு இருக்கிறார்கள். ஏது பேசினாலும் எதிர்க்கட்சிகளை வசைப்பாடி கொண்டு இருக்கிறார். பிரதமர்" என விமர்சித்துள்ளார்.

மேலும் அண்ணாமலை நடைபயணம் குறித்து பேசுகையில்," ஊடகம் நம் பக்கம் இருக்க வேண்டும் என பேசி கொண்டு இருக்கிறார். தம்மை பற்றி பேச வேண்டும் விளம்பர உலயவியலுக்கு ஆளாகி உள்ளார். அது ஒரு மேனியா என்று தான் சொல்ல வேண்டும். இந்த நடைபயணம் எந்த தாகத்தையும் ஏற்படுத்தாது " என்றும் விமர்சித்துள்ளார்.