சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் தினம் :
தைத்திருநாளின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தைத்திருநாளான இன்று திருவள்ளுவர் தினம் என்பதால் திருவள்ளுவரின் சிலைக்கு ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஆளுநர் மலர் தூவி மரியாதை :
அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட திருவள்ளுவரின் புகைப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆளுநருக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.