தமிழ்நாடு

திருவண்ணாமலை: லட்டு, முறுக்கு, காய்கனிகளால் பெரிய நந்திக்கு அலங்காரம்..!

Malaimurasu Seithigal TV

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திட்டி வாசல் வழியாக சூரியனுக்கு அண்ணாமலையார் காட்சியளித்த வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம்.

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில்  அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு  லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், கார வகைகள், காய்கனி மற்றும் பழ வகைகளாலும், வண்ண பூக்களால் பிரம்மாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.