தமிழ்நாடு

திருவிடைமருதூர் : 100 இடங்களில் விநாயகர் சிலைகள்..! ஏற்பாடுகள் தீவிரம்..!

திருவிடைமருதூர் வட்டாரத்தில் 100 இடங்களில் விநாயகர் சிலைகள் நாளை பிரதிஷ்டை...இந்து முன்னணி அமைப்புகள் தீவிரம்..

Malaimurasu Seithigal TV

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்புகள், தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், சுமார் நூறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பூம்புகாரில் இருந்து தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு திருவிடைமருதூர் வட்டார பகுதிகளில் உள்ள இந்து முன்னணி அமைப்பினரிடம் ஒப்படைத்து வருகின்றனர். நாளை அமாவாசை தினத்தில் அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கான தீவிர ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர்.