திருச்சி தில்லை நகரில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, தமிழகத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவே முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணயம் செய்யும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.