தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை...

நாமக்கல்லில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Malaimurasu Seithigal TV

நாமக்கல் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 10 லட்சத்து 36 ஆயிரத்து 566 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 734 பேர் ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் உள்ளனர். 

இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை அதிகரிக்கும் நோக்கில் நாமக்கல் மாவட்டத்தில் பொது இடங்களான நியாய விலைக்கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், டீ கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், துணிகடைகள், கடை வீதிகள், ஓட்டல்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
 
கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் உத்தரவிட்டுள்ளார்.