தமிழ்நாடு

ஈழத் தமிழர்களைப் போல் துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர்கள் மருது பாண்டியர்கள் ...வைகோ

ஈழத் தமிழர்களைப் போல் துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர்கள் மருது பாண்டியர்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

Malaimurasu Seithigal TV

மருது பாண்டியர்களின் 220வது நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று மருது பாண்டியர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். 

அப்போது பேசிய வைகோ, ஆங்கிலேயர்களுக்கு எதிராக, கட்டபொம்மனுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மருது பாண்டியர்கள் எனவும், கட்டபொம்மனுக்கு ஆதரவாக செயல்பட்டால், தங்கள் உயிருக்கு ஆபாத்தாகும் என தெரிந்தும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர், மருது பாண்டியர்கள் என புகழாரம் சூட்டினார்.

மேலும் ஈழ தமிழர்களை போல், துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர்கள் மருது பாண்டியர்கள் என கூறினார்.