தமிழ்நாடு

தொடர் விடுமுறையால் பழனியில் கோவிலில் குவிந்த பக்தர்கள் - சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்

பழனியில் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Suaif Arsath

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

தொடர் விடுமுறை என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதி முழுவதும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக் காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். படிப்பாதை, ரோப்கார் ஆகியவை மூலம் மலைக்கோவில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.