தமிழ்நாடு

ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் தஞ்சம்.. இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழலை ஏற்படுத்தி தர கோரிக்கை

Suaif Arsath

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நின்னகரை ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் தஞ்சமடைந்துள்ளன.

இங்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விதவிதமான பறவைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஏரியில் தற்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தஞ்சமடைந்துள்ளன.

பறவைகள் அமர்ந்து இளைப்பாறவோ, முட்டையிட்டு குஞ்சு பொறிக்கவோ போதுமான மரங்கள் இல்லாததால் அவை மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. ஆபத்தான உயர் மின் அழுத்த கோபுரத்தில் மிக நெருக்கமாக அமர்ந்து இளைப்பாறுகின்றன.

மேலும், ஏரியில் கழிவுநீர் கலப்பதால் ஏரி தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இதைத்தடுத்து, பறவைகள் சுதந்திரமாக அமர்ந்து இளைப்பாறி, இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும், சுற்றி மரங்கள் அமைத்து பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.