தமிழ்நாடு

நித்தியானந்தாவின் சீடர்கள் 3 பேர் கைது... நாமக்கல் ஆசிரமத்தில் தகராறு...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தகராறில் ஈடுப்பட்டதாக, நித்தியானந்தாவின் மூன்று சீடர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 

Malaimurasu Seithigal TV

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி அத்தாயி, கடந்த 5 ஆண்டுகளாக நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமிக்கு வங்கியில் இருந்த கடனுக்காக அத்தாயி கையெழுத்திட வேண்டும் என்பதால், அவரிடம் பலமுறை கேட்டும், அத்தாயி ஆசிரமத்திலிருந்து வரவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ராமசாமியின் வேண்டுகோளுக்கிணங்க, பெங்களூரு ஆசிரமத்திலிருந்து அத்தாயி உடன் 5 பேர் வந்துள்ளனர். இந்நிலையில், அத்தாயியிடம் கணவர் ராமசாமி மற்றும் அவரது மகன் ஆகியோர் சூழ்ந்து கொண்டு பேச சென்றபோது, நித்தியானந்தாவின் மற்ற சீடர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதில், ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகாரளித்துள்ளனர். 

புகாரின் அடிப்படையில், தற்போது நித்தியானந்தாவின் சீடர்கள் அகிலாராணி, சத்யா, ஜெயகிருஷ்ணா மற்றும், அத்தாயியின் கணவர் ராமசாமி மற்றும் மகன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.