கோவை மாவட்டம் வால்பாறை அருகே செங்குத்துப்பாறை எஸ்டேட்டில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு சுமார் 10 மணியளவில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையறிந்த தொழிலாளர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் அலறியடடத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி உயிர் தப்பித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையின் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் வீடுகள் மூன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. வீடுகளில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.