தமிழ்நாடு

முயல் வேட்டைக்கு சென்ற மூன்று பேர் மின்வேலியில் சிக்கி அடுத்தடுத்து மரணம்!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Suaif Arsath

திண்டிவனத்தை அடுத்த வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ், சுப்ரமணி, வெங்கடேசன் ஆகியோர், நேற்று இரவு பிரம்மதேசம் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் முயல் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

அப்போது சடகோபன் என்பவருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்துக்குள் நுழைந்த அவர்கள், மின்வேலியில் சிக்கினர். இதில் அடுத்தடுத்து முருகதாஸ், சுப்பிரமணி, வெங்கடேசன் ஆகியோர் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.