தமிழ்நாடு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Malaimurasu Seithigal TV

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் ஆளுநர் மளிகையில் தங்கவுள்ள அவர் அன்றைய தினமே மாலை 5 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, குடியரசுத் தலைவர் உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மறுநாள் காலை கோவை செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஊட்டி செல்வதாகவும் அங்கு ராணுவ நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.குடியரசு தலைவர் வருகையையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.