தமிழ்நாடு

ப்ளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்..- கவுன்சிலர் கோரிக்கை!

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.

Malaimurasu Seithigal TV

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், கவுன்சிலர்கள் பெரும்பாலும் தங்களது பகுதியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை என்று பேசினார்கள்.

அப்போது பேசிய, திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு கவுன்சிலர் சதீஷ் என்பவர், 1-வது  வார்டுக்குட்பட்ட சந்தை மேடு பகுதியில் திண்டிவனம் நகரத்தின் நுழைவு வாயிலில், மலைபோல் குவிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் பொதுமக்களுக்கு நோய் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த  நகர மன்றத்தின் போது கூறினேன். ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை” என்று கட்டமாகக் கூறினார்.

இதேக் கருத்தை மற்ற பல நகர மன்ற உறுப்பினர்களம் வலியுறுத்தி பேசினார்கள். இந்த கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இது மக்களால் பெரிதாக வரவேற்கப்பட்டது.