பண்ணை வீட்டிலிருந்து மக்களை சந்திக்க கூடியவர் தான் விஜய்.
சாதாரண எளிய மக்களை தினந்தோறும் ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
தொண்டர்களை ஊக்கிவிப்பதற்காக விஜய் பேசுகிறார்.
இங்கே பண்ணையார் ஆட்சி நடைபெறவில்லை பாமர மக்களாட்சி தான் நடைபெறுகிறது.
மும்மொழி கொள்கையை என்னவென்று விஜய்க்கு எதுவுமே தெரியாது.
எப்போதெல்லாம் இந்தி திணைக்கப்படுகிறது என்ற செய்தி வருகிறதோ அப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோழர்கள் தான் களத்தில் நின்று போராடி , ஆர்ப்பாட்டம் நடத்தி ,கைதாகி இருக்கிறார்கள். இந்த வரலாறு எல்லாம் விஜய்க்கு தெரியாது.
பாரதிய ஜனதா கட்சி எப்போது தொடங்கப்பட்டது என்று கூட விஜய்க்கு தெரியாது.
தங்களுடைய கட்சி தொண்டர்களை மகிழ்விப்பதற்காக இப்படி எல்லாம் விஜய் பேசி வருகிறார்.
தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று .
அதை செயல் படுத்தாத மாநிலங்கள் வட மாநிலங்களாக இருக்கிறது.
மக்கள் தொகையை ஒரு கணக்குக்கு மேல் அதிகரிக்காமல் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு , அதனால் இந்த மாநிலம் பாதிக்கப்படக்கூடாது.
மத்திய அரசு திட்டத்தை முழுமையாக செயல்படுத்திய காரணத்தினாலேயே ஒரு மாநிலம் பாதிப்புக்கு உட் படுகிறது என்ற நிலை வரக்கூடாது.